சிங்காரச்சென்னையின் சிதறுண்ட கோலங்கள்…….
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலைய மயணவர்களாகிய நாம். 16.10.2011 அன்று இந்தியாவை நோக்கிய ஊடகப்பயணம் ஒன்றை மேற்கொண்டோம் அப்போது சென்னைப்பல்கலைக்கழகத்துடன் இணைந்து எமது பயிற்சிகளை நாம் மேற்கொண்டோம். சிங்னகாரச்சென்னையின் நடுவே சிதறுண்டுகாணப்படும் ஒரு பகுதியை எமது களப்பயிற்சிக்காக தேர்ந்தெடுத்தனர். அப்பகுதியே பம்பிங்ஸ்ரேசன் என்னும் சேரிப்புறப்பகுதி. அடுக்குமாடிக்கட்டிடங்கள் நிறைந்து காணப்படும் வீதியையே தமது வீதியாகக்nhகண்டுவாழ்கிறார்கள் இம்மக்கள். அதுவும் நான்கடி இடைவெளி உள்ள நான்கு சிவர்களுக்குள்ளேயே தமது வாழ்க்கையை கழித்துக்கொண்டிருக்கிறார்கள் இம்மக்கள். இத்தனை வருடங்களாக அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி 350 வீடுகளில் 600, 700 இற்கு மேற்பட்ட குடும்பங்களாக சுமார் 3500 மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இந்த மக்கள் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததனால் தமது அந்த சிறிய குடிசைசையே சலவை செய்யும் இடமாகவும், பாத்திரங்கள் கழுவும் இடமாகவும் , தூங்கும் இடமாகவும் , சமையலட செய்யும் இடமாகவும் பாவித்து வருகின்றனர்.
அந்த மக்களது ஒவ்வொரு குடிசையையும் உற்றுநோக்குமிடத்து இருபக்கமும் சிறிய சிறிய தொடர்குடிசை நடுவே இருவர் சேர்ந்து செல்லுமளவில் ஒரு பாதை அவ் இருபக்கமும் பிளாஸ்ரிக்பாத்திரங்கள் அடுக்கப்பட்டு காணப்படுகின்றன.. அவர்களின் வீட்டின் முன்னே கழிவுநீர் வாய்க்கால் என்ற பெயரில் ஒன்று உண்டு ஆனால் அதனுர்டு நீர் செல்வதில்லை தேங்கிநின்று அதன் பல்வேறுபகுதிகளிலும் பரவி காணப்படும் அதே வேளை துர்நாற்றம் வீசும்.இவ்வளவுக்குள்ளும் தான் அந்த மக்கள் வாழ்கின்றனர். இப்படியான ஒரு இடத்தில் 5அறிவு படைத்தவிலங்கே தங்காதுஆனால் ஆறு அறிவு படைத்த அந்த மக்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். ஓரிரு வருடமல்ல பரம்பரை பரம்பரையாக தலைமுறை தலைமுறையாக வாழ்கின்றனர்.
அந்த வீட்டின் கூரை கண்ணாடி ஓடுதான் மழை வந்தால் அந்தளவுதான் ஒழுகும் என்கிறார்கள். இந்த குடிசையில் சரியாக தூங்கக்கூட முடியாது என கையிலும் மடியிலும் சிறுகுழந்தைகளை வைத்துக்கொண்டு மனக்கலக்கத்துடன் கூறுகின்றார்கள். ஆந்தப்பச்சிளம் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகத்தான் காணப்படுகின்றது.
இதுபற்றி அப்பகுதி மக்கள் குறிப்பிடுகையில் தேர்தல்காலங்களில் அது செய்யிறம் இது செய்யிறம் என்று சொல்லிக்கொண்டு வருவாங்க தேர்தல் முடிந்தவுடன் அது நிறைவேற்றப்படுவதில்லை திரும்பக்கேட்டால் நாம வந்து பார்க்கிறம் நீங்க போங்கஎன்று சொல்லுவாங்க. ஆனால் இதுவரைக்கும் வந்ததும் இல்லை பார்த்ததும் இல்லை அப்படி இருக்கும் வேளையில்தான் கலைஞர் கருணாநிதி எங்களுக்கெல்லாம் வீடுகட்டித்தாறம் என்று வந்து கதைத்து எமது வீடுகளை எல்லாம் பார்த்துச்சென்றார் ஆனால் அதற்குள் ஆட்சிமாற்றம் வந்துவிட்டது. இப்படித்தான் ஒவ்வொரு தடவையும் நடை.பெறுகின்றது எனக்கூறுகின்றார்கள் அந்தப்பம்பிங் ஸ்ரேசன் மக்கள்.
இத்தகைய இப்பகுதியில் பல்கலைக்கழத்தில் படித்துப்பட்டம் பெற்றவர்களும் இருக்கின்றார்கள் Nவைலைக்குச்செல்பவர்களும் இருக்கின்றார்கள். ஆவர்கள் கூறினார்கள் குடும்ப கஸ்ரம் காரணமாக பிள்ளைகளை படிக்க அனுப்வுவதில்லை வேலைக்கு அமர்த்துகிறார்கள் நாம் கூறினாலும் கேட்கமாட்டார்கள். எனவும் தெரிவித்தனர்.
அத்துடன் அடிப்படை வசதிகள் இல்லை எனவும் சுகாதாரப்பிரச்சனை முக்கிய பிரச்சனையாகக்காணப்படுகின்றது எனவும் தெரிவித்தனர்.இதனால் குழந்தைகளுக்கு பல்வேறுபட்ட நோய்கள் ஏற்பட்டு அவர்கள் இறக்கவும் நேர்ந்துள்ளது எனவும் தெரிவித்தனர். சுற்றுப்புசச்சூழல் சீர்கேடு சம்பந்தமாக அப்பகுதி இளைஞர்களிடம் நீங்கள் இவற்றை துப்பரவு செய்யலாமே எனக்கேட்டபோது அவர்கள் இப்படியான அறிவுரைகளை எங்களுக்கு இதுவரைக்கும் யாரும் கூறியதில்லை எனிமேல் நாம் முயற்சி செய்கின்றோம் எனவும் தெரிவித்தனர் எனவே நான் கேட்பது என்னனவென்றால் ஊடகங்கள் மக்களுக்காக செயற்படுகின்றது என்று கூறுகின்றனர் மக்களின் பிரச்சனைகளை வெளிக்கொணர்கிறது என்கின்றனர் ஆனால் இந்தியாவிலுள்ள ஊடகங்கள் ஏன் இத்தகைய பிரச்சனைகளை கண்டுகொள்ளவில்லை. ஏன்பது என்மனதில் இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது.
மற்றும் மணவர்கள் படிப்பதற்கு பாடசாலை வசதிகளும் இல்லை வெளியில் சென்று படிக்கவிடுவதென்றால் அதிக பணம் செலவாகின்றது எனவும் தெரிவித்தனர் .அதைவிட இம்மக்கள் கேட்பதெல்லாம் தமக்கு இருப்பதற்கு வீடு கட்டித்தரவேண்டும் என்பதுதான் எனவும் மிகுந்த கவலையுடன் தெரிவித்தனர்.
Tuesday, January 10, 2012
மீண்டும் மிளிருமா கிராமத்தின் ஒளிவிளக்கு
மீண்டும் மிளிருமா கிராமத்தின் ஒளிவிளக்கு
ஒரு சமூகத்தின் அபிவிருத்தி;க்கும் சமூக முன்னேற்றத்திற்றும் வழிவகுப்பது சமூக அமைப்புக்களும் சமூக நிறுவனங்களும் ஆகும். குறிப்பாக கிராமப்புறங்களின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் சமூக நிறுவனங்களும் பிரதான பங்கு வகிக்கின்றன. இந்த வகையில் கிராமத்தின் ஒளிவிளக்காக விளங்கும் சன சமூக நிலையங்கள் பிரதான இடத்தை வகிக்கின்றன.
தென்மராட்சிப்பிரதேசத்தின் வடக்கே அமைந்துள்ள சரசாலை தெற்கு கிராமத்தின் பல்வேறு அபிவிருத்திக்கும் மக்களின் சமூக நல மேம்பாட்டிற்கும் பெரிதும் உறுதுணையாக அமைந்தது மகேஸ்வரி சனசமூகநிலையமாகும். இது இன்று ஒளிமங்கி வலுவிளந்து அயல்பெண்களின் அரட்டை அரங்கமாகவும் ஏனைய இளைஞர்களின் பொழுதுபோக்கிற்கான ஓர் இடமாகவும் இரவுகளில் கால்நடைகளின் புகலிடமாகவும் மாறிவருகின்றது .
கிராமத்தின் நலன்கருதி கிராம மக்களின் முன்னேற்றம் கருதி ஊர்ப்பிரமுகர்களால் ஒன்றுபட்டு உருவாக்கப்பட்டு கிராமத்தின் பல்வேறு நலன்புரிச்செயற்பாடுகளுக்கும் உறுதுணையாக அமைந்தது.
மகளிருக்கான பல்வேறு தொழிற்பயிற்சிகள் , பாலர்கல்வி நிலையம், சிறுவர்பூங்கா, வாகிசசாலை என பலபிரிவுகளைக்கொண்டு கிராம மக்களுக்கு பல்வேறு நலச்சேவைகளை ஆற்றிவந்த இந்த சனசமூக நிலையம் இன்று தனது வாசகர்களை இழந்து பூட்டப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
இதன் ஆரம்பகாலத்தலைவராக இருந்த திரு. சரவணமுத்து தங்கராசா அவர்கள் அயராது அல்லும் பகலும் மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் இச்சமூக நிலையத்தின் சேவையை விரிவுபடுத்தி செயற்படுத்தி வந்தார்.
பின்னர் 2006ஆம் ஆண்டு இவர் இயற்கையை எய்தியவுடன் இந்நிலையத்தின் செயற்பாடுகள் பணிகள் அனைத்தும் அப்படியே ஸ்தம்பித்து விட்டன. பாலர்கல்வி நிலையம் இருந்த இடமே தெரியாது சென்றுவிட்டது. சிறுவர்பூங்காவும் குடும்பப்பெண்களின் பூங்காவானது. நிலையக்கட்டிடமோ அயற்பெண்களின் அரட்டைக்கூடமாகக்காணப்படுகின்றது. புதினப்பத்திரிகை இங்கிருந்து மாயமாக மறைந்துவிட்டது. தற்பொழுது புதினப்பத்திரிகை எடுப்பாரும் இல்லை பார்ப்பாரும் இல்லை. சனசமூக நிலையம் தற்பொழுது செயலிழந்து பல ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கின்றது. இதனால் வயோதிபர்கள் இளைஞர்கள், மக்கள் ஆகியோர் ஒரு கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள ஏனைய சமூக நிலையங்களுக்கும் நூலகங்களுக்கும் சென்று பத்திரிகை படிக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
இதனால் இச்சமூக நிலையத்தை மீள இயங்கச்செய்து இந்நிறுவனத்தின் பழைய சேவைகளை மக்களுக்கு வழங்கமாட்டார்களா எனவும் கிராம மக்கள் அங்கலாய்க்கின்றனர். எனவே சம்மந்தப்பட்டோர் இதனை கருத்தில் எடுத்து இச்சனசமூக நிலையத்தை இயங்கச்செய்தோ அல்லது மீள உருவாக்கியோ புதிய நிர்வாக சபை ஒன்றை உருவாக்கியோ இந்நிறுவனத்தை புத்துயிர்பெறச்செய்து மக்களுக்கு மீண்டும் இச்சேவைகளைச்செய்யவேண்டும் என கிராமமக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

Subscribe to:
Posts (Atom)